ரோட்டின் நடுவே வைக்கப்பட்டதடுப்புச்சுவரில் லாரி மோதி விபத்து

ரோட்டின் நடுவே வைக்கப்பட்ட தடுப்புச்சுவரில் லாரி மோதி விபத்து ஏற்பட்டது

Update: 2023-09-02 22:02 GMT

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்துக்கு உருளைக்கிழங்கு பாரம் ஏற்றிய லாரி ஒன்று நேற்று முன்தினம் புறப்பட்டது. லாரியை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த குருசாமி (வயது 35) என்பவர் ஓட்டினார். இந்த லாரி நேற்று அதிகாலை 4 மணி அளவில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையம் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி ரோட்டின் நடுவே வைக்கப்பட்டிருந்த தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார். எனினும் லாரியின் டீசல் டேங்க் உடைந்து அதில் இருந்த டீசல் வெளியேறி ரோட்டில் சிந்தியது. இதுகுறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும் பேரூராட்சி பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு சென்று டீசல் சிந்திய இடத்தில் மண் போட்டனர். இதுகுறித்து அந்தியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்