சிறுத்தைப்புலியை பிடிக்க கூண்டு வைப்பு
சிறுத்தைப்புலியை பிடிக்க கூண்டு வைப்பு
ஆனைமலை
ஆனைமலையை அடுத்த வேட்டைக்காரன் புதூர், காளியாபுரம், மாட்டை கவுண்டன் கோவில், பொன்னாளம்மன் துறை ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக அவ்வப்போது வனத்தில் இருந்து சிறுத்தைப்புலி வெளியே வந்து விவசாய நிலத்தில் மேய்ச்சலில் ஈடுபடும் கால்நடைகளை கடித்து கொன்று வருகிறது.
இதற்கிடையில் மீண்டும் முருகேசன் என்பவரது பசுமாட்டை சிறுத்தைப்புலி கடித்துக்கொன்றது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்லவே அச்சப்படுகிறார்கள். இதையடுத்து அங்கு சிறுத்தைப்புலி நடமாட்டத்தை கண்காணிக்க பொன்னாளம்மன் துறை பர்வதமலை நிலத்தில் உள்ள பண்ணையை சுற்றி 4 கேமரா பொருத்தப்பட்டு உள்ளன. மேலும் சிறுத்தைப்புலியை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து, கண்காணித்து வருகின்றனர்.