சூளையில் வேலை பார்த்தபோது பரிதாபம்:செங்கல்கள் சரிந்து விழுந்து கல்லூரி மாணவர் சாவு
சூளையில் வேலை பார்த்தபோது செங்கல்கள் சரிந்து விழுந்து கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள ஆண்டார்கொட்டாரம் பகுதியை சேர்ந்தவர் மாசானம். இவருடைய மகன் சரண்குமார் (வயது 19). அந்த பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். மேலும், புளியங்குளம் பகுதியில் உள்ள செங்கல் சூளையிலும் பகுதி நேரமாக வேலை செய்து வந்தார். நேற்று, வேலை செய்து கொண்டிருந்தபோது, அங்கிருந்த செங்கல்கள் சரிந்து விழுந்ததில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.