குலசேகரன்பட்டினத்தில் பரிதாபம்:தம்பதி விஷம் குடித்து தற்கொலை

குலசேகரன்பட்டினத்தில் தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2023-01-10 18:45 GMT

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினத்தில் உடல்நலக் குறைவால் கணவர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கணவன், மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

போக்குவரத்துக்கழக ஊழியர்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம் எம்.ஜி.ஆர். நகர் வடக்கூரைச் சேர்ந்தவர் ஜான்ராஜ் (வயது 43). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக திருச்செந்தூர் பணிமனையில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி சேர்மகனி (35).

இந்த தம்பதிகளுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

புற்று நோய்க்கு சிகிச்சை

இந்தநிலையில் ஜான்ராஜ் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஜான்ராஜ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு குணமாகாததால் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனையடுத்து கடந்த இருஆண்டுகளாக வீட்டில் இருந்து வந்துள்ளார்.  ஜான்ராஜ் உடல்நிலை மோசமானதால் சேர்மகனி அடிக்கடி தனது கணவர் இறந்த பின் தானும் இறந்து விடுவதாக தனது அண்ணன் பட்டுத்துரையிடம் அடிக்கடி கூறி வந்துள்ளார். இந்நிலையில் பட்டுத்துரை தினமும் காலையில் தனது தங்கையிடம் செல்போனி ல் பேசுவது வழக்கம் ஆனால் நேற்று காலையில் தங்கை பேசாததால், சந்தேகமடைந்த  பட்டுத்துரை குலசேகரன்பட்டினம் வந்துள்ளார்.

பிணமாக கிடந்தனர்

தங்கையின் வீட்டிற்கு அவர் சென்றபோது, வீடு பூட்டி கிடந்ததுள்ளது. இதனையடுத்து வீட்டின் பின்பக்கம் சென்று பார்த்தபோது தங்கை சேர்மகனியும், அவரது கணவர் ஜான்ராஜூவும்  பூச்சிமருந்து குடிந்துவிட்டு இறந்து நிலையில் கிடந்துள்ளனர். அவர்களது உடலை பார்த்து பட்டுத்துரை கதறி அழுத்துள்ளார். பின்னர்  பட்டுத்துரை அளித்த புகாரின் குலசேகரன்பட்டினம்  இன்ஸ்பெக்டர் ரகுராஜன், சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் சம்பவ வீட்டுக்கு சென்று தம்பதியினரின் உடலை கைப்பற்றி திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வஇசாரணை நடத்தி வருகின்றனர். தம்பதியினர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குலசேகரன்பட்டினம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

-------

Tags:    

மேலும் செய்திகள்