படிக்கு அருகில் அமர்ந்து பயணம் செய்ததால் பரிதாபம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு

படிக்கு அருகில் அமர்ந்து பயணம் செய்ததால் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் இறந்தாா்

Update: 2023-08-07 21:05 GMT

சேலம் மாவட்டம் மாவேலிபாளையம் ரெயில் நிலையம் அருகில் செல்லும் தண்டவாளத்தில் வாலிபர் பிணம் கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஈரோடு ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்த வாலிபர், மேற்கு வங்காளத்தை சேர்ந்த அப்துல் அஜார் (வயது 19) என்பதும், அவுரா-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் படிக்கு அருகில் அமர்ந்து பயணம் செய்தபோது நிலைத்தடுமாறி தவறி கீழே விழுந்த அவர் படுகாயம் அடைந்து உயிரிழந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அப்துல் அஜாரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Tags:    

மேலும் செய்திகள்