ஏழைகளுக்கு பித்ரா அரிசி
கடையநல்லூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஏழைகளுக்கு பித்ரா அரிசி வழங்கப்பட்டது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நலிவடைந்த 1000 ஏழை குடும்பங்களுக்கு பித்ரா அரிசி வழங்கும் விழா காயிதே மில்லத் சேவைக்குழு வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு நகர தலைவர் செய்யது மசூது தலைமை தாங்கினார். கடையநல்லூர் தொகுதி அமைப்பாளர் ஹைதர் அலி, நகர துணைத் தலைவர் முஹம்மது இஸ்மாயில், நகர்மன்ற உறுப்பினர்கள் அக்பர் அலி, முஹம்மது மைதீன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முஹம்மது துராப்சா, மீரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் அய்யூப் கான் வரவேற்றார். நல்லாசிரியர் செய்யது மசூது, நகர கவுரவ ஆலோசகர் செய்யது இஸ்மாயில், ஆசிரியர் மசூது, மஜீத் ஆகியோர் பித்ரா அரிசி வழங்கினர். விழாவில் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நகர பொருளாளர் திவான் மைதீன் நன்றி கூறினார்.