முன்னோடி மனுநீதி நாள் முகாம்
பன்னீர்குளம் கிராமத்தில் முன்னோடி மனுநீதி நாள் முகாம் நடந்தது.;
கயத்தாறு:
கயத்தாறு தாலுகா பன்னீர்குளம் கிராமத்தில் முன்னோடி மனுநீதி நாள் முகாம் நடந்தது. தூத்துக்குடி கலெக்டர் அலுவலக சமூக பாதுகாப்பு திட்ட கூடுதல் ஆட்சியர் ஜேயின் கிறிஷ்டி தலைமை தாங்கி, மனுக்களை பெற்றார். முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டுமனை பட்டா உள்பட 200-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.
முகாமில் கயத்தாறு தாசில்தார் சுப்புலட்சுமி, பன்னீர்குளம் பஞ்சாயத்து தலைவர் பொன்னுச்சாமி பாண்டியன், வட்ட வழங்கல் தாசில்தார் திரவியம், பட்டா துறை தாசில்தார் அந்தோணி ஜெபராஜ், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.