அன்னாசி பழம் விற்பனை படுஜோர்
திருவாரூரில் அன்னாசி பழம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. ஒரு பழம் ரூ.25 முதல் விற்கப்படுகிறது.
திருவாரூர்:
திருவாரூரில் அன்னாசி பழம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. ஒரு பழம் ரூ.25 முதல் விற்கப்படுகிறது.
அன்னாசி பழம் விளைச்சல்
அன்னாசி பழம் அதிக அளவில் கேரளா, ஆந்திரா கடற்கரையோர பகுதிகளில் பயிரிடப்படுகிறது. அன்னாசி பழம் இனிய சுவை உடையது. இதில் அதிக அளவில் வைட்டமின் சத்துக்கள், இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் உள்ளன.. அன்னாசி பழத்தை சாப்பிடுவதால் பித்தம் சம்பந்தமான நோய்கள் தீரும் மற்றும் ஜீரண சக்தியையும் அதிகரிக்கும்.
அன்னாசி பழத்தை அடிக்கடி சாப்பிட்டால் கண் தொடர்பான நோய்கள் சரியாகும். இந்த ஆண்டு கேரளாவில் அன்னாசி பழம் விளைச்சல் அமோகமாக இருந்து வருகிறது. இதனால் அங்கிருந்து பழங்கள் விற்பனைக்காக பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.
விற்பனை படுஜோர்
அதன்படி திருவாரூர் பகுதிக்கு மினி வேனில் அன்னாசி பழம் விற்பனைக்கு ெகாண்டு வரப்பட்டுள்ளது. இந்த அன்னாசி பழங்கள் ஒன்று ரூ.25, ரூ.30, ரூ.35 என அளவிற்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது.
கோடைக்காலத்தில் குளிர்ச்சித்தன்மை உடைய அன்னாசி பழங்களை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்று ருசித்து வருகின்றனர். இதனால் அன்னாசி பழம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.