பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம்

கோழியூர் மாரியம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம்

Update: 2022-08-10 16:31 GMT

திட்டக்குடி

திட்டக்குடி அடுத்த கோழியூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. இதில் அம்மனை வேண்டி விரதம் இருந்த பக்தர்கள் வெள்ளாற்றில் இருந்து பால்குடம், தீச்சட்டி எடுத்துக் கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். மேலும் சிலர் அலகு குத்தியும், அம்மன் வேடம் அணிந்தபடியும் வந்தனர். தொடர்ந்து மாரியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் அருள்பாலிக்க மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்