பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம்

கொட்டாம்பட்டி அருகே பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2022-08-09 21:22 GMT

கொட்டாம்பட்டி,

கொட்டாம்பட்டி அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தில் பிரசித்திபெற்ற துபாரள்பதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி திருவிழாவிற்காக கடந்த 15 நாட்களுக்கு முன்பு காப்புகட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. காப்பு கட்டிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து வந்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வான நேற்று துபாரள்பதி அம்மனுக்கு பால்குடம் எடுக்கும் விழா நடைபெற்றது.

இதையொட்டி காப்பு கட்டிய 5 ஆயிரத்துக்கும் மேலான பக்தர்கள் நேற்று அதிகாலையில் மணல்மேட்டுப்பட்டியில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். சொக்கலிங்கபுரம் முக்கிய தெருக்கள் வழியாக சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக பால்குடம் சுமந்து துபராள்பதி அம்மன் கோவிலை வந்தடைந்தனர் பின்னர் அம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து பக்தர்கள் கிடா வெட்டி பொங்கலிட்டு வேண்டுதலை நிறைவேற்றினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்