ஆங்கில புத்தாண்டையொட்டி அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

ஆங்கில புத்தாண்டையொட்டி அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

Update: 2023-01-01 10:59 GMT

அவினாசி

ஆங்கில புத்தாண்டையொட்டி அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

அவினாசிலிங்கேஸ்வரர் கோவில்

திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும், காசிக்கு நிகரான கோவில், முதலையுண்ட பாலகனை சுந்தரர் பதிகம் பாடி உயிருடன் மீட்ட வரலாறு என பல்வேறு சிறப்புகள் பெற்றதாக அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் விளங்குகிறது. சித்திரை தேர்த்திருவிழா, ஆடிப்பண்டிகை, தைப்பொங்கல், யுகாதி பண்டிகை, தமிழ்ப்புத்தாண்டு, ஆங்கில புத்தாண்டு ஆகிய விசேஷ நாட்களில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்கள், பிற மாநிலங்களிலிருந்தும் திரளான பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

கடந்த 2 வருடங்களாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அரசு தடைசெய்திருந்தது. எனவே விசேஷ நாட்களில் பக்தர்கள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடியாமல் போனது. இந்த வருடம் தடை நீக்கப்பட்டது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள்

இந்த நிலையில் நேற்று ஆங்கில புத்தாண்டையொட்டி கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் காலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு இந்த புத்தாண்டில் கொரோனா தொற்று நீங்கவும், மக்கள் செழிப்புடன், அமைதியாக வாழவும் வேண்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. இந்த புத்தாண்டு தினத்தில் சாமி தரிசனம் செய்வதற்காக தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்தும் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் நீண்ட வரிசையில் பல மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டதால் அவினாசி மெயின் ரேட்டில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதேபோல் ஆகாசராயர் கோவில், கரிவரதராஜப்பெருமாள் கோவில், வீர ஆஞ்சநேயர் கோவில், கருவலூர் மாரியம்மன் கோவில், பழங்கரை பொன்சோழீசுவரர் கோவில் ஆகிய கோவில்களிலும் ஆங்கிலப்புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.

---

அவினாசி லிங்கேசுவரர் கோவில் முன்பு திரண்டிருந்த பக்தர்கள்.

Tags:    

மேலும் செய்திகள்