திருவாரூரில் இருந்து எட்டுக்குடி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் காவடி ஏந்தி பாத யாத்திரை

திருவாரூரில் இருந்து எட்டுக்குடி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் காவடி ஏந்தி பாத யாத்திரை நடந்தது.

Update: 2023-05-05 19:30 GMT

நாகை மாவட்டம் எட்டுக்குடியில் முருகன் கோவில் உள்ளது. ஆதிப்படை வீடு என்று இக்கோவில் அழைக்கப்படுகிறது. பதிணெண் சித்தர்களுள் ஒருவரான வான்மீகி சித்தர் ஜீவசமாதி அடைந்த 'பள்ளிப்படை ஸ்தலம்' என்ற சிறப்பும் இக்கோவிலுக்கு உண்டு. இந்த கோவிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா 10 நாட்கள் நடக்கும். பவுர்ணமி நாளுக்கு முந்தைய நாளே நடை திறக்கப்பட்டு பாலாபிஷேகம் நடக்கும். பவுர்ணமிக்கு மறுநாள் வரை முருகனுக்கு தொடாந்து நடை அடைக்கப்படாமல் பாலாபிஷேகம் நடந்து கொண்டே இருக்கும். வழக்கம்போல் இந்த ஆண்டும் எட்டுக்குடி முருகன் கோவில் சித்ரா பவுர்ணமி திருவிழா கடந்த மாதம் கொடியேற்றத்துடன தொடங்கியது. இந்த நிலையில் நேற்று சித்ரா பவுர்ணமி திருவிழாவையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடி ஏந்தியும் பாதயாத்திரையாக எட்டுக்குடி முருகன் கோவிலுக்கு சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்