சங்கரன்கோவிலில் இருந்து இருக்கன்குடிக்கு பக்தர்கள் பாத யாத்திரை

சங்கரன்கோவிலில் இருந்து இருக்கன்குடிக்கு பக்தர்கள் பாத யாத்திரையாக புறப்பட்டனர்.

Update: 2023-01-19 18:45 GMT

சிவகிரி:

சங்கரன்கோவில் ஈராத்து மாரியம்மன் திருச்சபை பக்தர்கள், இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு பாத யாத்திரையாக புறப்பட்டனர். அவர்களுக்கு வழியனுப்பு விழா, சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகம் அருகில் நடந்தது. பா.ஜ.க. வெளிநாடு வெளிமாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில துணை தலைவர் அ.ஆனந்தன் தலைமை தாங்கி, பாத யாத்திரை பக்தர்கள் சுமார் 500 பேருக்கு பழங்கள், பிஸ்கட், தண்ணீர் பாட்டில், சூடம் போன்றவற்றை வழங்கினார். குருசாமிகள் ராஜ்குமார், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பா.ஜ.க. நகர தலைவர் கணேசன், நகர துணைத்தலைவர் கனி, நகர நெசவாளர் பிரிவு தலைவர் வேல்ராஜ், இளைஞரணி நகர தலைவர் விக்னேஷ், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு நகர தலைவர் சங்கர்ராஜ், கூட்டுறவு பிரிவு நகர தலைவர் ராம்ஜி, ஊடக பிரிவு நகர தலைவர் பிரபாகரன், விளையாட்டு பிரிவு மாவட்ட துணை தலைவர் பெரியசாமி, விளையாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் பிரதீப்ராஜன், கலை கலாசார பிரிவு மாவட்ட செயலாளர் செல்வகாமாட்சி, கண்ணன் மகேந்திரன், சண்முகையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்