குலமங்கலம் சாலையில் மறியல்

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி குலமங்கலம் சாலையில் மறியல் போராட்டம் நடந்தது.;

Update: 2022-11-10 20:43 GMT

மதுரை கோசாகுளம் அருகே உள்ள வேல் நகர் பகுதியில் குடிநீர் பணிக்காகவும் பாதாள சாக்கடைகளுக்காகவும் தோண்டப்பட்ட குழி மூடப்படாமல் உள்ளது. மேலும் சமீபத்தில் பெய்த மழை காரணமாக அப்பகுதி முழுவதும் மழைநீர் தேங்கி நிற்கும் குழியாகவும், சேறும் சகதியுமாக காணப்படுகிறது. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே அதனை சரி செய்யவும், அப்பகுதிகளில் குடிநீர் சரிவர வழங்க கோரியும், அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் குலமங்கலம் பிரதான சாலையில் அப்பகுதி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின் அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்