தேவகோட்டை அருகே குடிநீர் கேட்டு-காலி குடங்களுடன் பெண்கள் மறியல்

தேவகோட்டை அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-01-12 18:45 GMT

தேவகோட்டை

தேவகோட்டை அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

தேவகோட்டை ஒன்றியம் குருந்தனகோட்டை ஊராட்சி பாவாசி கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்களுக்கு கடந்த சில மாதங்களாக குடிநீர் முறையாக வழங்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் செய்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் நேற்று காலிகுடங்களுடன் மதுரை-தொண்டி சாலையில் மறியலுக்கு திரண்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாவாசி சாலையிலேயே பொதுமக்களை தடுத்து நிறுத்தினர். அங்கு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

அப்போது அவர்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதர், மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பலமுறை குடிநீர் கேட்டு கோரிக்ைக விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் தான் ெபாதுமக்களுடன் மறியலில் ஈடுபட்டோம் என முன்னாள் யூனியன் துணைத்தலைவர் பாவாசி கருப்பையா தெரிவித்தார். ெதாடர்ந்து அதிகாரிகள் நடத்திய சமரசத்தை தொடர்ந்து அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்