பிசியோதெரபிஸ்ட் பரிதாப சாவு

அம்பை அருகே மோட்டார் சைக்கிள் மீது லோடு ஆட்டோ மோதிய விபத்தில் பிசியோதெரபிஸ்ட் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-06-13 19:48 GMT

அம்பை:

அம்பை அருகே மோட்டார் சைக்கிள் மீது லோடு ஆட்டோ மோதிய விபத்தில் பிசியோதெரபிஸ்ட் பரிதாபமாக இறந்தார்.

பிசியோதெரபிஸ்ட்

நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள அகஸ்தியர்பட்டி நர்மதை தெருவை சேர்ந்தவர் மெல்கி முத்துராஜ் (வயது 37). இவர் வெள்ளாங்குழியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்ட்டாக பணியாற்றி வந்தார்.

நேற்று காலை மெல்கி முத்துராஜ் வழக்கம் போல் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். அகஸ்தியர்பட்டியை அடுத்த பொன்நகர் பகுதியில் இருந்து மன்னார்கோவில் செல்லும் சாலையில் ரெயில்வே கேட் அருகே சென்றபோது எதிரே வந்த லோடு ஆட்டோ, அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

பரிதாப சாவு

இதில் மெல்கி முத்துராஜ் தூக்கி வீசப்பட்டு, தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த மெல்கி முத்துராஜூக்கு மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்