மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-03 21:50 GMT

தஞ்சாவூர்;

தஞ்சை மாவட்ட தேசிய மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செல்ல.பாரி தலைமை தாங்கினார். மாநகர தலைவர் துரை, மாநகர செயலாளர் லூர்துசாமி, மாவட்ட துணை செயலாளர் திருமலை கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிறுவன தலைவர் நெடுவைசரவணன் கலந்து கொண்டு பேசினார்.ஆர்ப்பாட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும்.

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 2 நாட்கள் வேலை வழங்க வேண்டும். மேலும் குடிசை மாற்று வாரியம் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வீடுகளை ஒதுக்கீடு செய்து இன்னும் சாவியை ஒப்படைக்காத சம்பந்தப்பட்ட நிர்வாகத்தை கண்டிப்பது.தஞ்சை மாவட்டத்தில் 41 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கும் மேலாக பதிவு செய்யப்பட்டு ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.

எங்களுக்கு என்று தனியாக ஒரு தொழில் மையமோ தொழில் பயிற்சி மையமோ இல்லாத நிலையில் தஞ்சை ஒன்றியம் ஆலங்குடி கிராமத்தில் மிகவும் போராடி அனுமதி பெற்று கட்டிட வேலை முடிவுற்ற நிலையில் இன்னும் அதை திறக்காமல் காலம் தாழ்த்தி வரும் மாவட்ட நிர்வாகத்தை கண்டிப்பது. மாற்றுத்திறனாளிகளுக்கு பஸ் நிலையம் மற்றும் பொதுஇடங்களில் கட்டப்பட்டுள்ள கழிவறையை முறையாக பராமரிக்க வேண்டும். உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்