விழுப்புரம் மாவட்டத்தில்தமிழ்நாடு நாள் விழாவையொட்டி புகைப்பட கண்காட்சிகலெக்டர் தகவல்

விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு நாள் விழாவையொட்டி புகைப்பட கண்காட்சி நடைபெறுகிறது என்று கலெக்டர் தெரிவித்துள்ளாா்.

Update: 2023-07-17 18:45 GMT


தமிழ்நாடு அரசு, நடப்பு ஆண்டில் ஜூலை 18-ம் நாளை தமிழ்நாடு நாள் விழாவாக மாநிலம் முழுவதும் உள்ள பொதுமக்கள், மாணவர்கள் அறியும் வண்ணம் அவர்களிடம் தமிழ்நாடு நாள் உருவான வரலாறு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்ட தலைநகரங்களில் பள்ளி மாணவ- மாணவிகளை கொண்டு பேரணி மற்றும் கண்காட்சி நடத்த அறிவுறுத்தப்பட்டது.

அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடப்பு ஆண்டிற்கான 'தமிழ்நாடு நாள் விழா" இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 23-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

தமிழ்நாடு நாள் விழாவில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தமிழ்நாடு உருவான விதம் மற்றும் தமிழ்நாட்டின் கலாசாரம், பாரம்பரியம், பண்பாடு, பெருமைகள் குறித்த சிறப்பு புகைப்பட கண்காட்சியும், பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவ- மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியும் நடைபெற உள்ளது.

எனவே பொதுமக்கள், பள்ளி மாணவ- மாணவிகள் ஆகியோர் 'தமிழ்நாடு நாள் விழா" சிறப்பு புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டு, தமிழ்நாடு உருவான விதம், தமிழ்நாட்டின் கலாசாரம், பாரம்பரியம், பண்பாடு, பெருமைகள் குறித்து அறிந்து பயன்பெற வேண்டுமென மாவட்ட கலெக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்