திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்பட கண்காட்சி

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்பட கண்காட்சியை கலெக்டர் விசாகன் திறந்து வைத்தார்.

Update: 2022-05-30 16:27 GMT

இந்திய சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு மகத்தானது. தமிழகத்தை சேர்ந்த தியாகிகள் பலர் சுதந்திரத்துக்காக தங்களுடைய இன்னுயிரை இழந்தனர். அத்தகைய சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவுகூரும் வகையில் மாவட்டந்தோறும் நிரந்தர புகைப்பட கண்காட்சி அமைக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 29 சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்படங்கள் சேகரிக்கப்பட்டு, செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் நிரந்தர கண்காட்சி அமைக்கப்பட்டது.

இந்த நிரந்தர புகைப்பட கண்காட்சியை கலெக்டர் விசாகன் நேற்று திறந்து வைத்தார். பின்னர் தியாகிகளின் புகைப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கண்காட்சியை கலெக்டர் அலுவலக ஊழியர்கள், மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க வந்த பொதுமக்கள் அனைவரும் பார்வையிட்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்