தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

தர்மபுரியில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இதனை மாணவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்

Update: 2023-01-28 18:45 GMT

தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓயா உழைப்பின் ஓராண்டு, தமிழரின் கனவுகளை தாங்கி என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் தர்மபுரி இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் தமிழ்நாடு முதல்- அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள், அரசின் சிறப்பு திட்டங்களான காலை உணவு திட்டம், கல்லூரி கனவு, புதுமைப் பெண், மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் திட்டம், எண்ணும் எழுத்தும், இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், பெண்களுக்கான இலவச பஸ் பயணம், நம்ம ஊரு சூப்பரு, மீண்டும் மஞ்சப்பை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, அமைச்சர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் தொடர்பான புகைப்படங்கள் உள்பட அரசின் பல்வேறு சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் இடம்பெற்று உள்ளன. இந்த கண்காட்சியை பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்