கிருஷ்ணகிரியில்தொழிலாளியிடம் செல்போன் பறித்தவர் சிக்கினார்

Update:2023-03-08 00:30 IST

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி லண்டன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 24). கூலித்தொழிலாளி. இவர் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் கடந்த 5-ந் தேதி நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் வெங்கடேசனின் பாக்கெட்டில் இருந்த செல்போனை பறித்து கொண்டு ஓட முயன்றார்.

இதை கவனித்த வெங்கடேசன் அவரை விரட்டினார். இதில் செல்போனை திருடிய நபர் கீழே விழுந்து காயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் பிடித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசில் ஒப்படைத்தனர். அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

விசாரணையில் செல்போனை திருடியவர் ராஜேஷ் (34), கிருஷ்ணகிரி ராயக்கோட்டை சாலையை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இதுதொடர்பாக கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்