சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா

நாகை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-03-28 18:45 GMT

நாகை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வைணவ திவ்யதேச கோவில்

நாகையில் சவுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது. 108 வைணவ திவ்யதேசங்களில் 19-வது திவ்யதேசமாக இக்கோவில் உள்ளது. இங்கு பங்குனி திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக சவுந்தரராஜ பெருமாள், உபயநாச்சியார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இதையடுத்து கொடி ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் கோவிலில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா! கோவிந்தா! என பக்தி கோஷமிட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழா நாட்களில் தங்க மயில், தங்க யானை, தங்க குதிரை, கருடர், அனுமார் உள்ளிட்ட வாகனங்களில் சாமி புறப்பாடு நடக்கிறது. மேலும் முத்துப்பல்லக்கு, புஷ்ப பல்லக்கு, கண்ணாடி பல்லக்கு, தங்கரதம் உள்ளிட்டவற்றில் சாமி வீதி உலா நடக்கிறது.

தேரோட்டம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 5- ந்தேதி (புதன்கிழமை) நடக்கிறது. அதேபோல் தெப்ப உற்சவம் வருகிற 13-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்