அத்திக்கடவு-அவினாசி திட்ட குளம், குட்டைகளில் நிறுவப்பட்டநீர் அளவிடும் கருவிகள் திருட்டு; பெருந்துறை போலீஸ் துணை சூப்பிரண்டிடம் விவசாயிகள் புகார்

அத்திக்கடவு-அவினாசி திட்ட குளம், குட்டைகளில் நிறுவப்பட்ட நீர் அளவிடும் கருவிகள் திருட்டு; பெருந்துறை போலீஸ் துணை சூப்பிரண்டிடம் விவசாயிகள் புகார்

Update: 2023-05-07 21:04 GMT

பெருந்துறை

பெருந்துறை தொகுதியில் அத்திக்கடவு-அவினாசி நீரேற்று திட்டம் நிறைவடைந்து தற்போது குளம், குட்டைகளுக்கு நீரை அனுப்பும் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து அந்த குளம், குட்டைகளுக்கு தண்ணீர் எவ்வளவு வருகிறது என்பதை கண்டறிய நீர் அளவிடும் கருவிகள் சம்பந்தப்பட்ட குளம், குட்டைகளில் நிறுவப்பட்டுள்ளன.

இந்த நிலையில் 30-க்கும் மேற்பட்ட குளம்-குட்டைகளில் நிறுவப்பட்டிருந்த நீர் அளவிடும் கருவிகளை சமூக விரோதிகள் யாரோ திருடிச் சென்றுவிட்டனர். இது குறித்து துடுப்பதியைச் சேர்ந்த அத்திக்கடவு-அவினாசி திட்ட கோரிக்கை அமைப்பாளர் டி.கே.பெரியசாமி மற்றும் செயலாளர் முருகபூபதி ஆகியோர் பெருந்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயபாலனிடம் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தனர். அப்போது பெருந்துறை பேரூராட்சி முன்னாள் தலைவர் பல்லவிபரமசிவன், முன்னாள் கவுன்சிலர் கே.ஆர்.தங்கவேல், தொழில் அதிபர் டி.என்.சென்னியப்பன் உள்பட பலர் உடன் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்