செல்போனில் விடுத்த கோரிக்கைக்கு கலெக்டர் உடனடி நடவடிக்கை

செல்போனில் விடுத்த கோரிக்கைக்கு கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Update: 2022-07-03 17:17 GMT

தொண்டி, 

திருவாடானை தாலுகா காரங்காடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெபமாலை. இவரது மனைவி சசிகலா. காதுகேளாத மாற்றுத்திறனாளி ஆவார். இவர்களுக்கு திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2 குழந்தைகள் பிறந்துள்ளன.இந்த குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட பிறப்பு சான்றிதழ்களில் தந்தை பெயரில் ஏற்பட்ட குளறுபடியால் சிரமப்பட்டு வந்துள்ளனர்.

இந்தநிலையில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பொதுமக்கள் தங்களின் கோரிக்கை தொடர்பாக மாவட்ட கலெக்டரின் செல்போன் எண்ணில் தெரிவிக்கலாம் என அறிவித்திருந்ததை செய்திதாள்கள் வழியாக தெரிந்து கொண்ட சசிகலா அவருடைய கோரிக்கையை மாவட்ட கலெக்டருக்கு குரல் செய்தி மூலம் அனுப்பினார். இந்த கோரிக்கை தொடர்பாக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் திருவாடானை தாசில்தாருக்கு அறிவுறுத்தியதை தொடர்ந்து திருவாடானை தாசில்தார் செந்தில்வேல் முருகன், உரிய ஆவணங்களை பரிசீலனை செய்து திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இவர்களது குழந்தை பிறந்திருந்ததால் திருநெல்வேலி மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டதின் அடிப்படையில் ஒரு வாரத்திற்குள் இரண்டு குழந்தைகளின் பிறப்பு பதிவிலும் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு பிறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்