பெட்ரோலிய விற்பனையாளர்கள் போராட்டம்

மீஞ்சூர் அருகே பெட்ரோலிய விற்பனையாளர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Update: 2022-06-01 11:09 GMT

தமிழகத்தில் சென்னை, எண்ணூர், அத்திப்பட்டுபுதுநகர், திருச்சி, வாழ்வந்தான், சேலம் தொழில்பேட்டை, மதுரை சிட்கோ, நெல்லை, தச்சநல்லூர் உள்பட 14 இடங்களில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் பெட்ரோல் டீசல் 5,800 டீலர்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

பாரத் பெட்ரோலிய முனையங்களில் இருந்து டேங்கர் லாரிகள் மூலம் பெட்ரோல், டீசல் நிரப்பிக்கொண்டு விற்பனை மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து அறிவிப்பு வெளியிட்டார். அதற்கு முன் பெட்ரோல், டீசல் விற்பனையாளர்கள் நாள்தோறும் விற்பனைக்காக எரிபொருள்களை வாங்கிய நிலையில் மத்திய மந்திரியின் அறிவிப்பால் விற்பனைக்காக வாங்கப்பட்ட பெட்ரோலிய பொருட்கள் விலை குறைந்ததால் சில்லரை விற்பனை விலையை மாற்றி அமைக்கும்போது டீலர் ஒருவருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு ஏற்பட்டுள்ளது.

இதனை கண்டிக்கும் வகையில் நேற்று மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் உள்ள பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் நுழைவுவாயில் முன் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தமாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களை கொள்முதல் செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் தமிழ்நாடு முழுவதும் ஒருநாள் விற்பனை தடைபட்டதால் ரூ.450 கோடி வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு பெட்ரோல் விற்பனையாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்