பெட்ரோல் பங்க் ஊழியர் விஷம் குடித்து தற்கொலை
வந்தவாசி அருகே பெட்ரோல் பங்க் ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வந்தவாசி
வந்தவாசியை அடுத்த ஆரியாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 41), பெட்ரோல் பங்க் ஊழியர். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாததால் ஸ்ரீதர் மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று அவர் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவரது தாய் கிருஷ்ணவேணி அளித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.