பெட்ரோல் விற்பனை குறித்து வாடிக்கையாளர்கள் கருத்து

பெட்ரோல் விற்பனை குறித்து வாடிக்கையாளர்கள் கருத்து

Update: 2023-05-26 19:15 GMT

மயிலாடுதுறையை சேர்ந்த மகேஸ்வரன்:-

பெட்ரோல் பங்க்குகளில் நடைபெற்று வரும் முறைகேடுகளில் தினம் தினம் சாமானிய மக்கள் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். புகார் அளித்தால், விசாரணைக்கு பின் தவறு இருக்கும்பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க கூடிய சூழல் வர வேண்டும். வரிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெட்ரோல் விலை மிகவும் அதிகமாக இருப்பதால் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்புவதற்கு வாகன ஓட்டிகள் மிகவும் அதிகமாக செலவு செய்ய வேண்டியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். இதற்கு எல்லாம் நிரந்தரமாக முடிவு கட்டும் வகையில் கடுமையான விதிமுறைகளை அரசு வகுக்க வேண்டும்.

ஆய்வு தேவை

சீர்காழியை சேர்ந்த நாகூரான்:-

நான் ஏழை குடும்பத்தை சேர்ந்தவன். கடன் வாங்கி மோட்டார் சைக்கிள் வைத்துள்ளேன். இந்த சைக்கிளை நம்பித்தான் எனது வாழ்வாதாரம் உள்ளது. தினமும் வீட்டில் இருந்து வேலைக்கு செல்ல வேண்டுமானால் எனது மோட்டார் சைக்கிளில் தான் செல்ல வேண்டும். மேலும் தினமும் வேலைக்குச் சென்றால் தான் எனது குடும்பத்தை நடத்த முடியும். தினமும் வீட்டிலிருந்து வேலைக்குச் செல்ல வேண்டுமானால் 2 நாட்களுக்கு ஒரு முறை ரூ.100-க்கு பெட்ரோல் நிரப்ப வேண்டும். பெட்ரோல் பங்குகளில் அளவு குறைந்தால் ஒரு சிலர் மட்டுமே கேள்வி கேட்கிறார்கள்.

பெரும்பாலான மக்கள் பெட்ரோல் பங்கில் அளவு குறைவு பற்றி கேட்பது இல்லை. பெட்ரோல் கிடைத்தால் போதும் என நினைக்கிறார்கள். என்னைப் போன்ற ஏழை எளிய மக்கள் பெட்ரோல் அளவு குறைவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அரசு அவ்வப்போது அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் சரியான அளவு பெட்ரோல் வழங்கப்படுகிறதா? என ஆய்வு செய்ய வேண்டும்.

எப்படி சரி பார்ப்பது?

பொறையாறை சேர்ந்த சுற்றுலா வேன் டிரைவர் எம். அப்துல்காதர்:-

நான் சவாரிக்கு தகுந்தாற் போல் டீசல் நிரப்ப செல்லும் வழியில் உள்ள பங்குகளுக்கு வேனை ஓட்டிக்கொண்டு செல்வேன். சில பங்குகளில் சிறிய அளவில் ஓஸ் வைத்து இருப்பார்கள், சில பங்குகளில் பெரிய அளவில் (நீளமான) ஓஸ் வைத்து இருப்பார்கள். பம்பை வெளியில் எடுத்து ஆன் செய்யும் போது ஜீரோவில் இருந்த மீட்டர் திடீரென வேகமாக ஓடும். டீசல் நிரப்பிய போது மீதி டீசல் அல்லது பெட்ரோல் ஓசில் தங்கிவிடும். இதனால் அளவு குறைவை எப்படி சரி பார்ப்பது என்று எங்களுக்கு தெரியவில்லை.

பெட்ரோல் பங்குகளில் ாலுகா வட்ட வழங்கல் அலுவலரும் ஆய்வு செய்யலாம். நுகர்வோர்கள் யாரிடம் புகார் செய்வது என்று தெரியாமல் உள்ளனர். மோட்டார் சைக்கிள், கார், வேன், ஆட்டோக்களில் மைலேஜ் குறைந்து விட்டது என்று ஷோரூம் அல்லது மெக்கானிகிடம் கூறினால், நாங்கள் முடிந்த வரையில் என்ஜினில் சரி சய்து விட்டோம். நீங்கள் பங்குகளில் பெட்ரோல் அல்லது டீசல் அளவை சரி பாருங்கள் என்று கூறி விடுகின்றனர். இதை மத்திய அரசு மற்றும் பெட்ரோலியத்துறை சரிசெய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்