நிதி நிறுவன அதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

திருமயம் அருகே நிதிநிறுவன அதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டுகளை வீசிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-01 18:51 GMT

லாரி கண்ணாடி உடைப்பு

திருமயம் அருகே உள்ள அரங்கிணாம்பட்டியை சேர்ந்தவர் ஜோதி (வயது 30), நிதி நிறுவன அதிபர். அதே ஊரை சேர்ந்தவர்கள் மகேஷ் (23), ராகவன் (19). இவர்கள் 3 பேரும் நண்பர்கள் ஆவர்.

கடந்த மாதம் ஒரு லாரியின் கண்ணாடியை மகேஷ், ராகவன் ஆகியோர் உடைத்துள்ளனர். இதை லாரி உரிமையாளரிடம் ஜோதி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக பனையப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

2 பேர் கைது

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஜோதியின் வீட்டுக்குள் மகேஷ், ராகவன் ஆகியோர் பெட்ரோல் குண்டுகளை வீசினார்கள். அது வீட்டு வராண்டாவில் விழுந்து வெடித்து சிதறியது. இதில் அங்கிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. இந்த சம்பவம் தொடர்பாக ஜோதியின் தாயார் அடக்கம்மை அளித்த புகாரின் பேரில் பனையப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேஷ், ராகவன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்