தஞ்சையில் காங்கிரஸ் நிர்வாகி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
காங்கிரஸ் நிர்வாகி வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தஞ்சை,
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் மாநில மாணவரணி இளைஞர் காங்கிரஸ் செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவரது வீட்டின் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 3 பேர் கொண்ட கும்பல், பெட்ரோல் நிரப்பப்பட்ட பீர் பாட்டிலை ஸ்ரீகாந்தின் வீட்டின் மீது வீசிவிட்டுச் சென்றுள்ளனர். இதில் வீட்டின் கதவு எரிந்து சேதமடைந்தது. இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.