மகளை மீட்க ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்வது விசாரணைக்கு உகந்ததல்ல-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

கணவன்-மனைவி பிரச்சினையில் மகளை மீட்க ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்வது விசாரணைக்கு உகந்ததல்ல என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Update: 2022-06-02 20:13 GMT

மதுரை, 

மதுரையைச் சேர்ந்த துர்க்கா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், என்னுடைய 6 வயது மகள் மோனுமிதாவை அசோக்குமார் என்பவர் சட்டவிரோதமாக பிடித்து வைத்துள்ளார். அவரிடம் இருந்து என் மகளை மீட்டு ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், விஜயகுமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரும், எதிர்மனுதாரரான அசோக்குமாரும் கணவன்-மனைவி. தற்போது இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினையால் பிரிந்து வாழ்கின்றனர். ஆனால் இவர்களுடைய மகளை அசோக்குமார் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.

அவரிடம் இருந்து சிறுமியை மீட்டு தன்னிடம் ஒப்படைக்கும்படி மனுதாரர் கோரியுள்ளார். அவரது கோரிக்கையானது, ஆட்கொணர்வு மனுவாக தாக்கல் செய்ய முடியாது. இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல. மனுதாரர் தனது கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட கோர்ட்டில் முறையிடலாம். இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்