தென்காசியில் கால்நடை பராமரிப்பு இணை இயக்குனர் அலுவலகம் அமைக்கக்கோரி அமைச்சரிடம் மனு

தென்காசியில் கால்நடை பராமரிப்பு இணை இயக்குனர் அலுவலகம் அமைக்கக்கோரி அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டது.

Update: 2023-10-19 18:45 GMT

சுரண்டை:

தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார். அந்த மனுவில், 'தென்காசி மாவட்டத்தில் அதிக அளவில் கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு கால்நடைகள் வளர்ப்பு முக்கிய காரணமாக இருக்கிறது. தென்காசி மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு இணை இயக்குனர் அளவில் ஒரு அலுவலகம் அமைக்கப்படும் பட்சத்தில் மக்களின் பொருளாதாரம் மேலும் மேம்படுத்தப்படுவதுடன் கால்நடைகள் பாதுகாக்கப்படும். எனவே மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சுரண்டையில் உள்ள கால்நடை மருந்தகத்தை கால்நடை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்' என்று கூறப்பட்டு உள்ளது.

இதேபோல் அவர் நீர்வளம் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகனை சந்தித்து கொடுத்த மனுவில், 'சுரண்டை நகராட்சி பகுதியில் ஊரின் நடுவே செண்பக கால்வாய் உள்ளது. அந்த கால்வாய் வழியாக தான் அடவிநயினார் அணையில் இருந்து உபரிநீர் விவசாயத்திற்கு வரும். எனவே கால்வாயில் கான்கிரீட் தளம் அமைத்து செண்பக கால்வாயை சீரமைக்க நிதி ஒதுக்கி தரும்படி கேட்டுக்கொள்கிறேன்' என்று கூறப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்