'மராட்டியத்தில் கிடைத்த வெற்றியை இந்தியாவின் கருத்தாக பார்க்கிறேன்' - தமிழிசை சவுந்தரராஜன்

மராட்டியத்தில் கிடைத்த வெற்றியை ஒட்டுமொத்த இந்தியாவின் கருத்தாக பார்ப்பதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.;

Update:2024-11-23 20:42 IST

சென்னை,

மராட்டியத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கும் கடந்த 20ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் ஆளும் பாஜக, சிவசேனா ( முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தரப்பு), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் தரப்பு) இணைந்து மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே தரப்பு) தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் தரப்பு) இணைந்து மகாவிகாஸ் அகாடி கூட்டணியும் களத்தில் இறங்கின.

தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்ட நிலையில், பா.ஜ.க. தலைமையிலான ஆளும் மகாயுதி கூட்டணி பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் முன்னிலை பெற்று வெற்றியை உறுதி செய்துள்ளது. இந்த வெற்றியை பா.ஜ.க.வினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், மராட்டியத்தில் கிடைத்த வெற்றியை ஒட்டுமொத்த இந்தியாவின் கருத்தாக பார்ப்பதாக தெலுங்கானா முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில், "மராட்டிய மாநிலம் ஒரு சிறப்பு வாய்ந்த மாநிலம். அங்கு மராட்டிய மக்கள் மட்டுமின்றி, நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இருந்து குறிப்பிட்ட சதவீத மக்கள் மராட்டிய மாநிலத்தில் வாழ்ந்து வருகின்றனர். எனவே, அங்கு கிடைத்த வெற்றியை ஒட்டுமொத்த இந்தியாவின் கருத்தாக நான் பார்க்கிறேன்" என்று தெரிவித்தார்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்