நாங்குநேரி பள்ளியில் விளையாட்டு மைதானம் அமைக்கக்கோரி அமைச்சரிடம் மனு
நாங்குநேரி பள்ளியில் விளையாட்டு மைதானம் அமைக்கக்கோரி அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டது.
இட்டமொழி:
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, நாங்குநேரி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது, நாங்குநேரி சங்கர் ரெட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய விளையாட்டு மைதானம் மற்றும் மினி ஸ்டேடியம் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தார். மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடனடியாக நிறைவேற்றி தருவதாக கூறினார்.