சுடுகாட்டிற்கு அடிப்படை வசதி கேட்டு கலெக்டரிடம் மனு

சுடுகாட்டிற்கு அடிப்படை வசதி கேட்டு கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

Update: 2023-07-29 18:05 GMT

கரூர் மாவட்ட தலித் விடுதலை இயக்கம், சமநீதி கழகம், ஆதித்தமிழர் கட்சி உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் நேற்று கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

புகழூர் வட்டம், அத்திப்பாளையம் ஊராட்சி, வல்லக்குளத்து பாளையம் ஆகிய பகுதிகளில் ஏராளமான அருந்ததியர் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான சுடுகாட்டில் போதிய அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை. கடந்த 2 நாட்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை புதைப்பதற்காக சுடுகாட்டில் குழி தோண்டியபோது, தண்ணீர் வந்து விட்டது. இதனால் கடும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. எனவே சுடுகாட்டில் உடலை புதைப்பதற்கு அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்