36 மாத ஊதியத்தை பெற்று தரக்கோரி பெண் டேங்க் ஆபரேட்டர் கலெக்டர் அலுவலகத்தில் மனு

36 மாத ஊதியத்தை பெற்று தரக்கோரி பெண் டேங்க் ஆபரேட்டர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

Update: 2022-11-13 18:30 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, மேலமாத்தூர் மேலத்தெருவை சேர்ந்தவர் சோலைமுத்து மனைவி செல்வி. இவர் நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார். அதில், நான் மேலமாத்தூர் கிராம ஊராட்சியில் டேங்க் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறேன். எனது 36 மாத கால ஊதியத்தை தராமல் ஏமாற்றி வரும் ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுத்து, எனது ஊதியத்தை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார். இதுகுறித்து மேலமாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மணிவண்ணன் கூறுகையில், பம்ப் ஆபரேட்டரான அந்த பெண் வேலைக்கு வராததால், ஊதியம் வழங்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்