கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் கலெக்டரிடம் மனு

மீண்டும் பணி வழங்கக்கோரி கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் கலெக்டரிடம் மனு

Update: 2022-07-03 16:08 GMT

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட அனைத்து பேரூராட்சி கொசுப்புழு ஒழிப்பு களப்பணியாளர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

கொரோனா காலத்தில் நாங்கள் இரவு பகல் பாராமல் கடுமையாக பணியாற்றி நோய் கட்டுப்பாட்டில் அளப்பறிய பங்களிப்பை செய்துள்ளோம். அதேபோல் டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க தொடர்ந்து பணியாற்றி வந்த நிலையில் கடந்த 4 மாதங்களாக எங்களுக்கு பணி வழங்கப்படவில்லை. இதனால் பேரூராட்சி பகுதிகளில் நோய் பரவும் சூழல் உள்ளதோடு வேலைவாய்ப்பு இல்லாமல் எங்கள் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. நோய் பரவலை கட்டுப்படுத்தவும், எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடவும் பேரூராட்சி கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களாகிய எங்களுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும். மேலும் தற்போது ஊரகப்பகுதிகளில் பணிபுரிந்து வரும் கொசுப்புழு ஒழிப்பு களப்பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.400 சம்பளம் வழங்கப்படுகிறது. அதேபோல் பேரூராட்சி கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களாகிய எங்களுக்கும் நாள் ஒன்றுக்கு ரூ.400 சம்பளத்தை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அம்மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற கலெக்டர் அலுவலக அதிகாரிகள், இது குறித்து பரிசீலனை செய்வதாக கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்