சிதம்பரத்தில் மனு கொடுக்கும் போராட்டம்
சிதம்பரத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.
சிதம்பரம்:
கடலோர மக்கள் வாழ்வாதார இயக்கத்தினர் நேற்று காலை சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர். இதற்கு பரங்கிப்பேட்டை ஒன்றிய அமைப்பாளர் சந்தானராஜ் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, மாவட்ட அமைப்பாளர் பாஸ்கர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் விஜய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து அவர்கள், சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமதாசிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
கடந்த 2004-ம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட பரங்கிப்பேட்டை பகுதி மீனவ மக்களுக்கு ஒப்படைப்பு பட்டாவை அரசு வழங்கி குடியிருக்க இடம் வழங்கியது. பின்னர் பல ஆண்டுகள் கடந்தும் அவர்கள் வாழும் இடத்திற்கு நிரந்தர பட்டாவாக மாற்றி தரவில்லை. இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட வருவாய் துறையினரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. மேலும் மீனவ மக்களின் வாழ்விடத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மனுவைப் பெற்றுக் கொண்ட அவர், இதுபோன்று மொத்தம் 2 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு நிரந்தர பட்டா மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்க உடனடியாக நிரந்தரப்பட்டா மாற்றி தரப்படும் என்றார்.