விழிப்புணர்வு பேரணிக்கு அனுமதி கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மனு

விழிப்புணர்வு பேரணிக்கு அனுமதி கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Update: 2023-10-10 19:34 GMT

விழிப்புணர்வு பேரணிக்கு அனுமதி கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தனர்.

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் சீ.ம.ரமேஷ்கர்ணா தலைமையில் நிர்வாகிகள் வழங்கிய மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

டிசம்பர் மாதம் 23-ந் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் வெல்லும் சனநாயகம் என்ற தலைப்பில் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அகில இந்திய அளவிலான தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

மாநாட்டின் நோக்கங்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த வருகிற 15-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை அனைத்து மாவட்ட தலைநகரிலும் சமூக நல்லிணக்க பேரணி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறும் சமூக நல்லிணக்க பேரணிக்கு அனுமதி அளித்து உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அப்போது கட்சியின் மண்டல துணை செயலாளர் தமிழ், முன்னாள் மாவட்ட செயலாளர் குண்டா சார்லஸ், மாவட்ட செய்தி தொடர்பாளர் சசிகுமார், ராணிப்பேட்டை தொகுதி செயலாளர் ராஜா, துணை செயலாளர் சுரேஷ், மாநில நிர்வாகி பெல்.சேகர், ராணிப்பேட்டை நகர செயலாளர் ராஜசேகர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்