உதவி கலெக்டரிடம் ஓய்வூதியர் சங்கத்தினர் மனு
தென்காசி உதவி கலெக்டரிடம் ஓய்வூதியர் சங்கத்தினர் மனு அளித்தனர்;
செங்கோட்டை:
அரசு ஓய்வூதியா்கள் சங்கம் செங்கோட்டை கிளை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி உதவி கலெக்டர் கெங்காதேவியிடம் மனு கொடுத்தனர். தென்காசி மாவட்ட அரசு ஓய்வூதியா்கள் சங்க தலைவா் வைரவன் தலைமையில் சென்று மனுவை அளித்தனர். அதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஓய்வூதியம் உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனர். செங்கோட்டை, தென்காசி, சுரண்டை, புளியங்குடி, சிவகிரி கிளைகளை சேர்ந்த நிர்வாகிகள் உடன் சென்றனர்.