இலவச வீட்டுமனை பட்டா கேட்டு முடி திருத்தும் தொழிலாளர்கள் கோரிக்கை மனு
இலவச வீட்டுமனை பட்டா கேட்டு முடி திருத்தும் தொழிலாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
நெமிலி
இலவச வீட்டுமனை பட்டா கேட்டு முடி திருத்தும் தொழிலாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
நெமிலி மற்றும் சுற்று வட்டார கிராமங்களான அசநெல்லிகுப்பம், ரெட்டிவலம், கீழ் வீதி, சம்பத்துராயன் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் முடிதிருத்தும் தொழிலை நம்பி 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலும் சொந்த வீடு இல்லாததால் வாடகை வீடுகளில் வசித்துவருகின்றனர்.
இந்த நிலையில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு நெமிலி முடிதிருத்தும் தொழிலாளர் நாவிதர் நலச்சங்கம் சார்பில் ஒன்றிய குழு தலைவர் வடிவேலுவிடம் வழங்கினர்.
அப்போது ஒன்றியக்குழு துணைத்தலைவர் தீனதயாளன், முடிதிருத்தும் தொழிலாளர் நாவிதர் நலச்சங்க தலைவர் ஏகாம்பரம், செயலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் பெருமாள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.