ஜல்லிக்கட்டு போட்டியை ரத்து செய்ய பீட்டா உள்ளிட்ட 15 அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் மனு - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

ஜல்லிக்கட்டு போட்டிக்கான அனுமதியை ரத்து செய்யக்கோரி பீட்டா உள்ளிட்ட 15 அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளன.

Update: 2022-11-15 04:47 GMT

சென்னை,

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றதாகும். மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான அனுமதியை ரத்து செய்யக்கோரி பீட்டா உள்ளிட்ட 15 அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளன.

இதனால் சென்னை, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது.அரசின் சார்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல் அமைச்சர் தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்