கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க.வினர் மனு

கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க.வினர் மனு அளிக்கப்பட்டது.

Update: 2022-06-16 18:20 GMT

கரூர் மாவட்ட அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு சார்பில் கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் ஒரு மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கரூர் எம்.ஆர்.வி. டிரஸ்ட் சார்பாக கரூர் மாநகரம் முழுவதும் சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு, மேற்படி டிரஸ்டின் சார்பாக கடந்த 3 வருடங்களாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த மரக்கன்றுகளை ஆடு, மாடுகள் மற்றும் வாகனங்கள் சேதப்படுத்திவிட கூடாது என்ற காரணத்தினால், தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு மரக்கன்றுகளுக்கும் இரும்பு கம்பியால் அமைக்கப்பட்ட கூண்டு பொருத்தப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு எம்.ஆர்.வி. டிரஸ்ட் என்று பொருத்தப்பட்டிருந்த பெயர் பலகையை அகற்றினர். அதேபோல ஒருசில இரும்பு கூண்டுகளையும் அகற்றினர்.

இது சம்பந்தமாக உரிய புகார் கொடுத்ததன் அடிப்படையில் மேற்படி கூண்டுகளும், பலகைகளும் மீண்டும் பொருத்தப்பட்டன. இன்று (அதாவது நேற்று) மீண்டும் மரக்கன்றுகளின் கூண்டுகளை மாநகராட்சி அலுவலர்கள் அகற்றி உள்ளனர். இதனால் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நடப்பட்டிருந்த மரக்கன்றுகள் அனைத்தும் சேதமாகிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து மரக்கன்று கூண்டுகளை அகற்றாமல் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்