முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 50% சொத்துக்கள் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 50% சொத்துக்கள் கோரி கர்நாடகாவை சேர்ந்த முதியவர் வாசுதேவன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Update: 2022-07-10 06:53 GMT

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 50% சொத்துக்கள் கோரி கர்நாடகாவை சேர்ந்த முதியவர் வாசுதேவன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ஜெயலலிதாவின் தந்தையான ஆர்.ஜெயராம் தான் தனக்கு தந்தை என்றும் தந்தை ஜெயராமின் முதல் மனைவி ஜெ.ஜெயம்மா என்றும் அவர்களின் ஒரே வாரிசு தான் மட்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தந்தை ஜெயராம் இரண்டாவதாக திருமணம் செய்துகொண்ட வேதவல்லி என்கிற வேதம்மா திருமணம் செய்துகொண்டதன் மூலம்தான், ஜெயக்குமாரும், ஜெயலலிதாவும் பிறந்ததாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். அந்தவகையில் ஜெயாலலிதா, ஜெயக்குமார் ஆகியோர் எனது சகோதர சகோதரி என்றும் 1950-ம் ஆண்டில் ஜீவனாம்சம் கேட்டு மைசூரு நீதிமன்றத்தில் தனது தாய் ஜெயம்மா வழக்கு தொடர்ந்தபோது அந்த வழக்கில் தந்தையின் இரண்டாவது மனைவி வேதவல்லி, ஜெயக்குமார், ஜெயலலிதா ஆகியோர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டு இருந்ததாகவும் வாசுதேவன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர். இந்த வழக்கு சமரசத்தில் முடிந்துவிட்டது. ஜெயலலிதா இறப்பதற்கு முன்பே ஜெயக்குமார் இறந்துவிட்டார். அதனால் இன்றைய தினத்தில் சகோதரன் என்ற முறையில் ஜெயலலிதாவின் நேரடிவாரிசு நான்தான். எனவே ஜெயலலிதாவின் சொத்துகளில் 50 சதவீதத்தை தர வேண்டுமெனவும், ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர் மட்டுமே ஜெயலலிதாவின் வாரிகள் என்று 2020ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்