ஒன்றிய கவுன்சிலர், வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனுதாக்கல்
திருப்பத்தூர் மாவட்டத்தில் காலியாக உள்ள ஒன்றிய கவுன்சிலர் மற்றும் வார்டு உறுப்பினர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் காலியாக உள்ள ஒன்றிய கவுன்சிலர் மற்றும் வார்டு உறுப்பினர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது.
தேர்தல்
ஊரக உள்ளாட்சி பகுதிகளில் பல்வேறு காரணங்களினால், காலியாக உள்ள உள்ளாட்சி பதவியிடங்களை நிரப்பிட, ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்திட, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில் வார்டு எண் 24, நாய்க்கனேரி கிராம ஊராட்சியில் வார்டு எண் 1 முதல் 9 வரை, ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியம், வள்ளிப்பட்டு ஊராட்சி வார்டு எண் 5 மற்றும் கந்திலி ஊராட்சி ஒன்றியம், சுந்தரம்பள்ளி ஊராட்சி வார்டு எண் 8 என மொத்தம் 12 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடக்க இருக்கிறது.
வேட்புமனு தாக்கல்
இதற்கான வேட்பு மனுதாக்கல் நாளை (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 27-ந் தேதி வரை நடக்கிறது.
ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலராலும், நாய்க்கனேரி கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலராலும், வள்ளிப்பட்டு, சுந்தரம்பள்ளி கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரால் மனுக்கள் பெறப்படும்.
28-ந் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படுகிறது.
வேட்பு மனு திரும்பப்பெற 30-ந் தேதி கடைசிநாள். அடுத்த மாதம் 9-ந் தேதி வாக்குப்பதிவும், 12-ந் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறு.
மாதனூர் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தல் நடைபெறுவதால், மாதனூர் ஊராட்சி ஒன்றியம் முழுமைக்கும் தேர்தல் நடத்தை விதிகள் பொருந்தும்.
அதேபோன்று வள்ளிப்பட்டு, சுந்தரம்பள்ளி ஊராட்சிகளுக்கும் தேர்தல் நடத்தை விதிகள் பொருந்தும்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.