சுழற்சி முறையில் ஜல்லிக்கட்டு மாடுகளை விடக்கோரி மனு

சுழற்சி முறையில் ஜல்லிக்கட்டு மாடுகளை விடக்கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-12-19 18:45 GMT

அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதியிடம் கோக்குடி கிராம மக்கள் ஒரு மனு அளித்தனர். அதில், எங்கள் கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 5-ந்் தேதி அந்தோனியார் பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். இதுவரை நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஒரு பிரிவினர் மட்டுமே முதல் மாடுகளை அவிழ்த்துவிட்டு வந்தனர். அதனை மாற்றி சுழற்சி முறையில் ஜல்லிக்கட்டு மாடுகளை விட வேண்டும். ஜல்லிக்கட்டுக்கான ஒரு கமிட்டி அமைத்து அதில் அனைத்து வகையான மக்களும் விளம்பரம் செய்ய வேண்டும். கமிட்டியில் உள்ளவர்கள் மட்டுமே வசூல் செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டானது அரசு அதிகாரி தலைமையில்தான் நடக்க வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு என தனியாக வங்கி கணக்கு தொடங்க வேண்டும். வசூலிக்கும் பணத்திற்கு ரசீது கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்