இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு கிராம மக்கள் மனு கொடுத்தனர்.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் விசாகன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமர்நாத் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அடிப்படை வசதிகள், உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
அந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் உத்தரவிட்டார். இதில் புரட்சி பாரதம் கட்சியினர் திண்டுக்கல் பகுதியை சேர்ந்த மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி மனு கொடுத்தனர். அவர்களுடன் மாலப்பட்டி, பாலகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்களும் வந்தனர். அப்போது புதிதாக நிலம் ஆர்ஜிதம் செய்து இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.