இலவச வீட்டுமனை பட்டா கோரி மனு கொடுக்கும் போராட்டம்

கடையநல்லூரில் இலவச வீட்டுமனை பட்டா கோரி மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.

Update: 2023-08-18 18:45 GMT

கடையநல்லூர்:

கடையநல்லூர் தாலுகாவிற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள சொந்த வீடு இல்லாத ஏழை எளிய விவசாய கூலி தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கோரி ஐக்கிய பொது உடைமை கட்சி (யு.சி.பி.ஐ.) சார்பில் கடையநல்லூர் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்துக்கு கடையநல்லூர் வட்டார பொறுப்பு செயலாளர் சம்சுதீன் தலைமை தாங்கினார். செயலாளர் அருணாசலம், இந்திய ஐக்கிய விவசாய தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த செய்யது அலி உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் தாலுகா அலுவலகத்தில் மனுக்களை கொடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்