ரவுடி வரிச்சியூர் செல்வத்தை காவலில் எடுத்து விசாரிக்க மனு

கூட்டாளி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி வரிச்சியூர் செல்வத்தை காவலில் எடுத்து விசாரிக்க விருதுநகர் கோர்ட்டில் போலீசார் மனுதாக்கல் செய்தனர்.

Update: 2023-06-23 18:46 GMT


கூட்டாளி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி வரிச்சியூர் செல்வத்தை காவலில் எடுத்து விசாரிக்க விருதுநகர் கோர்ட்டில் போலீசார் மனுதாக்கல் செய்தனர்.

கூட்டாளி கொலை

விருதுநகர் அல்லம்பட்டி வீரராமன் தெருவை சேர்ந்த செந்தில்குமார் (வயது 38). இவர் பிரபல ரவுடியான வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளியாக இருந்தார். இந்தநிலையில் கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் பிரிந்து வந்த செந்தில்குமாரை திட்டமிட்டு வரிச்சியூர் செல்வம் தனது கூட்டாளிகள் மூலம் சென்னையில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

பின்னர் செந்தில்குமார் உடலை துண்டு, துண்டாக வெட்டி தாமிரபரணிஆற்றில் வீசி உள்ளனர். இதையடுத்து வரிச்சியூர் செல்வத்தை போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

மனு தாக்கல்

செந்தில்குமார் கொலையில் ெதாடர்புடைய வரிச்சியூர் செல்வத்தின் மற்ற கூட்டாளிகள் 4 பேரை தனிப்படை போலீசார் தேடி வரும் நிலையில் வரிச்சியூர் செல்வத்தை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க விருதுநகர் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் நேற்று மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு வருகிற 26-ந் தேதி மாஜிஸ்திரேட்டு கவிதா முன்னிலையில் விசாரணைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய தினம் வரிச்சியூர் செல்வத்தை கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. செந்தில்குமாரின் உடலை சென்னையில் இருந்து நெல்லைக்கு கொண்டு வர பயன்படுத்திய கார் ஏற்கனவே போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. அந்த காரை போலீசார், விருதுநகர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்