இந்து மக்கள் கட்சியினர் போலீஸ் கமிஷனரிடம் மனு

இந்து மக்கள் கட்சியினர் போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்தனர்.

Update: 2022-12-29 20:25 GMT

இந்து மக்கள் கட்சி சார்பில் மதுரை மாவட்ட தலைவர் சோலைக்கண்ணன் மற்றும் நிர்வாகிகள் சார்பில் போலீஸ் கமிஷனர் செந்தில்குமாரிடம் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அந்த மனுவில், நடிகர் சித்தார்த், அவரது குடும்பத்தினருடன் சென்னை செல்வதற்காக சம்பவத்தன்று மதுரை விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அப்போது மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அவர் மற்றும் அவரது குடும்பத்தினரை சோதனை என்று 20 நிமிடம் நிற்க வைத்ததாகவும், இந்தியில் பேச சொல்லி கட்டாயப்படுத்தியதாகவும் அவர் இணையதளத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால் விமானநிலையத்தில் அது போன்ற எவ்வித சம்பவங்களும் நடக்கவில்லை என்றும், அவரிடம் பேசியவர் மத்திய தொழில் பாதுகாப்படையில் தமிழகத்தை சேர்ந்த பெண் ஒருவர் என்பதும் தெரியவந்தது. இது குறித்து அதிகாரிகள் தெளிவான விளக்கத்தை கூறியுள்ளனர். ஆனால் நடிகர் சித்தார்த் விளம்பரநோக்கத்தோடு, மொழி பிரச்சினையை தூண்டும் விதமாகவும், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களின் பணிகளை களங்கப்படுத்தி பொய்யான குற்றச்சாட்டுகளை வேண்டுமென்று இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். எனவே நடிகர் சித்தார்த் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. புகாரை பெற்று கொண்ட கமிஷனர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தாக சோலைக்கண்ணன் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்