இலவச வீட்டுமனை பட்டா கேட்டு குறைதீர்க்கும் கூட்டத்தில் கிராம மக்கள் மனு

Update: 2022-09-12 16:37 GMT

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், அருந்ததியர் முன்னேற்ற நலச்சங்கத்தின் தலைவர் வெங்கடேசன் தலைமையில், ஆலப்பட்டி கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ஆலப்பட்டி கிராமத்தில் 60-க்கும் மேற்பட்ட வீடுகளில் அருந்ததியர் மக்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். ஒவ்வொரு வீட்டிலும் 2, 3 குடும்பங்கள் இடநெருக்கடியில் வாழ்ந்து வருகிறோம். அன்றாடம் கூலி வேலை, காலணி தைக்கும் தொழில் செய்து வருகிறோம். இதன் மூலம் கிடைக்கும் கூலியை கொண்டு குடும்பத்தை நடத்தி வருகிறோம். மேலும், சிலர் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். எனவே, எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி, அரசின் திட்டங்கள் மூலம் வீடு கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனுவை பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, மனுக்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க தாசில்தாருக்கு உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்